ஈரோடு: ஈரோட்டில், த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா, தி.மு.க.,வை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், திருமானூரில் தமிழக, காங்., முன்னாள் தலைவர் மூப்பனாரின் எம்.பி., தொகுதி நிதியில், அரங்க மேடை அமைக்கப்பட்டு, பஞ்., நிர்வாக பயன்பாட்டில் இருந்தது. இதுபோன்ற இடங்களில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தக்கூடாது என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், நேற்று அந்த அரங்க மேடையை, தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி வருகிறார் என்பதற்காக, யூனியன் தலைவர் இடித்து சீரமைத்துள்ளார். அங்கிருந்த 'ஐயா ஜி.கே.மூப்பனார் அரங்கம்' என்ற பெயரை அழித்துள்ளனர். ஆட்சிக்கு வரும் முன்பே, அராஜக செயல்களில் ஈடுபடும், தி.மு.க.,வை கண்டித்து, தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி வாகனத்தை, த.மா.கா.,வினர் மறித்தனர். அரங்கம் இடித்தமைக்காக, எதிர்ப்பை பதிவு செய்தனர். அதுபோன்ற செயல்களில், தி.மு.க.,வினர் இனியும் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE