ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில், நேற்று, 90 சதவீத மாடுகள் விற்பனையானது. ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாடுகள் விற்பனைக்கு வரத்தானது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், மாடுகளை வாங்க வந்தனர். குறிப்பாக, தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து, அரசின் மானிய விலையில் பயனாளிகள் மாடு வாங்கும் திட்டத்தில், 150க்கும் மேற்பட்ட மாடுகள் வாங்கி சென்றனர்.
இது குறித்து, மாட்டு சந்தை துணை மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: நேற்றைய சந்தைக்கு, 30 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 450 பசு மாடு, 30 ஆயிரம் முதல், 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 250 எருமை மாடு, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 100 கன்றுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று, 90 சதவீத மாடுகள் விற்பனையானது. அரசின் மானிய திட்டத்தில், பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள், மாடு வாங்க வந்தனர். அவர்கள் மட்டுமே, 150 மாடுகளுக்கு மேல் வாங்கி சென்றனர். நேற்று, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான மாடுகள் விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE