சந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள்; அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இஸ்ரோ| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள்; அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இஸ்ரோ

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆக.,20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவில் இறங்குவதற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது. எனினும் விண்கலத்தின் ஆயுள் ஓராண்டு
ISRO, Chandrayaan-2, OrbiterData, Released, இஸ்ரோ, சந்திரயான்-2, தகவல்கள், வெளியீடு

புதுடில்லி: சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆக.,20ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவில் இறங்குவதற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது.

எனினும் விண்கலத்தின் ஆயுள் ஓராண்டு இருந்ததால், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து இயங்கியது. நிலவின் சுற்றுப்பாதையில் பல படங்கள் மற்றும் அறிவியல் தரவுகளை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்கு சந்திரயான்-2 விண்கலம் அனுப்பியுள்ளது.


latest tamil news


அப்போது நிலவின் துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றன. சுமார் 1,056 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பின் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உட்பட நான்கு இணையதளங்களில் இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X