தமிழ்நாடு

மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., அலுவலகங்கள் கலைப்பு : அரசு உத்தரவு

Added : ஜூலை 01, 2011
Advertisement

சிவகங்கை : டி.எஸ்.பி., தலைமையிலான மதுவிலக்கு பிரிவை கலைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை, டாஸ்மாக் மதுபான பார்களில் லைசென்ஸ் இன்றி, மதுபானம் விற்பதை தடுத்தல் போன்ற முறைகேடான செயலை தடுக்கும் நோக்கில், மாவட்ட வாரியாக கூடுதல் எஸ்.பி., தலைமையில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் கண்காணிப்பில் மதுவிலக்கு பிரிவு செயல்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் அவருக்கு கீழ், 15 பேர் வரை பணியாற்றுவர். இவர்கள் மதுவிலக்கு பிரிவு போலீசார் பிடிக்கும் வழக்குகள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகளை கண்காணித்து அரசுக்கு தகவல் தருவர்.


சிக்கனம்: அரசு சிக்கன நடவடிக்கை கருதி, ஒவ்வொரு மாவட்டத்திலும் டி.எஸ்.பி., தலைமையிலான மதுவிலக்கு பிரிவினை கலைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கூடுதல் எஸ்.பி.,க்களே நேரடியாக இவற்றை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" மாநில அளவில் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் இல்லை. டாஸ்மாக் பார்களில் முறைகேடாக விற்கப்படும் மதுபானங்களை பிடித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதே இப்பிரிவின் பணி. இவற்றை கண்காணிக்க, மதுவிலக்கு பிரிவு போலீசாரே போதும் என்ற நோக்கத்தில் தான் இப்பிரிவிற்கான டி.எஸ்.பி., பணியிடத்தை அரசு கலைத்துள்ளது,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X