உ .பி.,மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை காரில் கடத்தி 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக ஜலலாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க சென்றபோது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவரை தனி அறையில் வைத்து பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி விசாரித்து வருகிறார்.

மும்பை கடற்கரையில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டில்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராகவ் ஷத்தா அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
கைது

ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் 7 வங்கிக்கணக்கு துவங்கி, அதில் ரூ.9 கோடி டெபாசிட் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கவுரவ் சிங்கால் என்பவரை டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல்

காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில், அமீர் அஷ்ரப் கான் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டை பறிமுதல் செய்தனர்.
தமிழக நிகழ்வு
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி கத்தி முனையில் ரூ.27 லட்சம் பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூரில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆதித்யா ஷர்மா என்பவர் கொல்லப்பட்டார்.
உலக நடப்பு !
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியான பெனிஷங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE