தமிழகத்தில் இதுவரை 7.9 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 7.9 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020
Share
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (டிச.,25) 1,103 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.9 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,024 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,12,142 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 235 ஆய்வகங்கள் (அரசு-67
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (டிச.,25) 1,103 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 7.9 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,024 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,12,142 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 235 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-168) மூலமாக, இன்று மட்டும் 65,510 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 37 லட்சத்து 95 ஆயிரத்து 803 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 615 பேர் ஆண்கள், 412 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,90,735 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,21,373 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 1,103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 90 ஆயிரத்து 965 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 12 பேர் உயிரிழந்தனர். அதில், 8 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,048 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9,129 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X