சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயக்க நிலையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் : போலீசார் விசாரணை

Added : டிச 25, 2020
Share
Advertisement
அவிநாசி:மயக்க நிலையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண். பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்க அனுப்பிவைத்தனர். சேவூர் போலீசார் விசாரணை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையத்தில் இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் 8 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். மயக்க நிலையில் இருந்த அக்குழந்தையை கண்ட
 மயக்க நிலையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் : போலீசார்  விசாரணை

அவிநாசி:மயக்க நிலையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை விட்டுச்சென்ற பெண். பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்க அனுப்பிவைத்தனர். சேவூர் போலீசார் விசாரணை.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையத்தில் இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் 8 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். மயக்க நிலையில் இருந்த அக்குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள் பதறியடித்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். மூச்சுத் தினறலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் முதலுதவியளித்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பாலியல் துன்புறுத்தல் இல்லாததும், வலிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் கோயில் முன்பு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், அப்பெண் தான் கொண்டு வந்த பைகளை அப்பகுதியில் போட்டுச் சென்றுள்ளதும் தெரியவந்தது. அந்தப் பையில் இருந்த விளையாட்டு சாமான்கள் வாங்கிய பில்லின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள ஒரு கடையில் விளையாட்டு சாமான்கள் வாங்கியதும், அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் இந்த பெண் குழந்தையுடம் வந்து விளையாட்டு சாமான்கள் வாங்கியது அக்கடையின் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது.

அப்போது அப்பெண் குழந்தை நல்ல உடல்நிலையில் விளையாடிக்கொண்டிருந்ததாக அக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண் குழந்தையுடன் அந்த கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டோவாக எடுத்து போலீசாருக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த போட்டோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X