பாட்னா: அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் திடீரென பா.ஜ.விற்கு தாவினர்.
பீஹார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ. கூட்டணி, பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில் பா.ஜ. மட்டும் 74 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், 43 இடங்களில் மட்டுமே வென்றது. எனினும் தேர்தலுக்கு முன் ஏற்பட்ட ஒப்பந்தபடி முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் பதவியேற்றார்.
![]()
|
இந்நிலையில் அருணாச்சல் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பா.ஜ.விற்கு தாவியது நிதிஷ்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமுள்ள 60 இடங்களில் நிதிஷ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். அந்த ஏழு எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பா.ஜ.வில் இணைந்தனர். .இதனால் பா.ஜ. பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே கூட்டணியில் இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மீறி தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ. வளைத்துள்ளதால் நிதிஷ் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE