ஐதராபாத்:நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு அரசியல் தலைர்கள் பிரார்தித்துள்ளனர்.
![]()
|
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினி ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: இன்று (டிச.,25) நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அங்கு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 22ம் தேதி நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. அப்போது முதல் அவர், தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
அவருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையிலும், அவரது ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு ஏற்பட்டது. இதனால், தொடர் சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![]() ரஜினி விரைவில் நலம் பெற கமல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரார்த்தனை |
அரசியல் தலைர்கள் பிரார்த்தனை
நடிகர் ரஜினி காந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அடுத்து தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் தி.மு.க தலைவர் உள்ளிட்டோர் ரஜினி விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் தனது டுவிட்டர் பதிவில் நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth
— Kamal Haasan (@ikamalhaasan) December 25, 2020
ரஜினி உடல் நலம் குறித்து தொலை பேசியில் விசாரித்தார் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ .ரஜினி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக பா.ஜ. முருகன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE