பொது செய்தி

இந்தியா

ஒருநாள் ‛'பாஸ்டேக்' வசூல் ரூ.80 கோடியை கடந்தது

Updated : டிச 27, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி :நாடு முழுதும் உள்ள சுங்கச் சாவடிகளில், 'பாஸ்டேக்' வாயிலான சுங்க கட்டண வசூல், ஒரே நாளில், முதல் முறையாக, 80 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்கள், சுங்கக் கட்டணம் செலுத்தும் போது, நேரம் மற்றும் எரிபொருள் விரயமாவதை தவிர்ப்பதற்காக, மின்னணு முறையிலான, 'பாஸ்டேக்' கட்டண
பாஸ்டேக், வசூல்

புதுடில்லி :நாடு முழுதும் உள்ள சுங்கச் சாவடிகளில், 'பாஸ்டேக்' வாயிலான சுங்க கட்டண வசூல், ஒரே நாளில், முதல் முறையாக, 80 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்கள், சுங்கக் கட்டணம் செலுத்தும் போது, நேரம் மற்றும் எரிபொருள் விரயமாவதை தவிர்ப்பதற்காக, மின்னணு முறையிலான, 'பாஸ்டேக்' கட்டண நடைமுறையினை, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக, 'பாஸ்டேக்' எனப்படும், மின்னணு அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இதை, வாகனத்தின் முன் ஒட்ட வேண்டும். சுங்கச் சாவடிகளை கடக்கும் போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி வாயிலாக, நம் பாஸ்டேக் கணக்கில் இருந்து, கட்டணம் கழித்துக் கொள்ளப்படும். இதனால், சுங்கச் சாவடி வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்த பாஸ்டேக் கட்டண நடைமுறை, அடுத்த மாதம், 1ம் தேதி முதல், நாடு முழுதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் மட்டும், நாடு முழுதும் உள்ள சுங்கச் சாவடிகளில், பாஸ்டேக் முறையில், 50 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் வாயிலாக, 80 கோடி ரூபாய் கட்டணம், முதல் முறையாக வசூலானது. இந்த தகவலை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேற்று உறுதி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
27-டிச-202019:57:08 IST Report Abuse
K.n. Dhasarathan சுங்க வரி முறையில் இப்போது நடப்பது பகல் கொள்ளை, பத்து வருடங்களுக்கு மேல் ஆனால் பாதித்தான் வசூலிக்க வேண்டும் ஏனென்றால் பராமரிப்பு வேலை மட்டுமே, ஆனால் எங்காவது எப்போது ஆரம்பித்தார்கள் எப்போது முடியும் என்று போர்டு இருக்கிறதா ? காண்பிப்பவர்களுக்கு பரிசு தருகிறேன் சவாலாகவே சொல்கிறேன் காட்ட முடியுமா ? அதுதான் இல்லை இல்லை அடிப்படை வசதிகள் ஒப்பந்தப்படி மருத்துவ வசதிஉட்பட இருக்கிறதா ? ஆதாரத்துடன் சொல்கிறேன், செங்கல்பட்டு அடுத்து பரனுர் சுங்க சாவடி தண்டி போனால் சாலைகள் எவ்வளவு மோசம் என்பதை கண்குடாகவே பார்க்கலாம். விரைவில் இதற்க்கு தீர்வு வரும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
26-டிச-202019:58:11 IST Report Abuse
sankaseshan Thatvamasi உனக்கு சுங்கவரி கட்டணம் குறையனும் நல்லாரோடும் வேணும் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ரிப்பேர் காசு யார் கொடுப்பார் ராசா ? Ippo எல்லா பரிவர்தனையும் டிஜிட்டலில்தான் நடக்குது தெரியாதோ நோக்கு ?
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
26-டிச-202018:29:19 IST Report Abuse
தத்வமசி டோல் முறையை அறவே நீக்க முயற்சிக்க வேண்டும். காசு கொடுத்து செல்வதால் பாதி வருமானம் அரசுக்கு செல்வதில்லை. அதற்கு மக்களிடம் இருந்து ஆதரவு வேண்டும். மக்களுக்கு இலவசமாக எதுவும் கிடைக்காது என்பதும் அறிந்து கொள்ள வேண்டும். பாஸ்ட்டாக் ரீசார்ஜ் செய்யும் முறையை மிகவும் சுலாபமாக்க வேண்டும். இப்போது உள்ள நடைமுறை சாதாரண மக்களால் பயன்படுத்த முடியாது. சாலைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த நடைமுறை இன்னும் குறைக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்குள் மற்றொரு டோல் வந்து விடுகிறது. இது பொது மக்களுக்கு எரிச்சலைத் தான் கொடுக்கிறது. இப்போது நீண்ட தூரம் பயணிப்பது என்பது வாடிக்கையாகி விட்டது. அதனால் இந்த டோல் முறையை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும். இந்த டோல் கட்டணங்களை குறைக்க வேண்டும். முழுவதும் கணணி மயமாகினால் மொத்த வருமானமும் நேரடியாக அரசுக்கு செல்லும். அதன் மூலம் இடைத்தரகர்களின் கோட்டம் அடங்கும். அப்போதாவது கட்டணம் குறையுமா என்று நம்புவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X