மக்களை தவறாக வழிநடத்த பிரதமர் முயற்சி : மம்தா பாய்ச்சல்

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோல்கட்டா :“பொய்கள் மற்றும் திரிக்கப்பட்ட தகவல்களை வைத்து, மக்களை தவறாக வழிநடத்த, பிரதமர் மோடி முயற்சிக்கிறார்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடினார்.மேற்கு வங்க மாநிலத்தில், மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தாமல், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மம்தா பானர்ஜி துரோகம் இழைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி

கோல்கட்டா :“பொய்கள் மற்றும் திரிக்கப்பட்ட தகவல்களை வைத்து, மக்களை தவறாக வழிநடத்த, பிரதமர் மோடி முயற்சிக்கிறார்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடினார்.



latest tamil news




மேற்கு வங்க மாநிலத்தில், மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தாமல், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, மம்தா பானர்ஜி துரோகம் இழைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, அதற்கு பதிலடி கொடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, கூறியதாவது: விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, தான் விவசாயிகளுக்காக கவலைப்படுவதுபோல், பிரதமர் மோடி கூறி வருகிறார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை வைத்து, மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு உதவுவது போல், பேசி வருகிறார். அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறி வருகிறார்.


latest tamil news




உண்மை என்னவென்றால், அவர் பொய்கள் மற்றும் திரிக்கப்பட்ட தகவல்களை வைத்து, மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். விவசாயிகளின் நலன்களுக்காக, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற, என் அரசு தயாராக உள்ளது. எனினும், மத்திய அரசு, எங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதிகளை, மாநில அரசின் வாயிலாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மத்திய வேளாண் அமைச்சருக்கு கடிதம் கூட எழுதியுள்ளேன்.

மத்திய அரசுடன் இணைந்து, பல்வேறு திட்டங்களை, மாநிலத்தில் அமல்படுத்தியுள்ளோம். எனினும், விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டத்தில், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறுவது அபத்தமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-202023:09:11 IST Report Abuse
முக்கண் மைந்தன் இனிமேல்ட்டு தானா ?
Rate this:
Cancel
Kaipulla - Chennai ,இந்தியா
25-டிச-202022:45:33 IST Report Abuse
Kaipulla மாநில அரசின் வாயிலாக vazhanginal thane njanga paguthi kasa attaiya podamudiyum
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
25-டிச-202022:43:51 IST Report Abuse
Mannai Radha Krishnan அதவது விவசாயிகள் பணத்தை அவர்கள் கணக்கில் போடாமல் வங்க அரசிடம் கொடுக்க சொல்கிறார். அப்படி செய்தால் கட்சிக்கு % லாபம். நேரிடையாக கணக்கில் போட்டால் விவசாயிகள் மாநில அரசை மதிக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X