உமரியா:மத்திய பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் வன சரணாலயத்தில், சுற்றுலா பயணியர் வசதிக்காக, நாட்டில் முதன் முறையாக, 'ஹாட் ஏர் பலுான்' வசதி துவக்கி வைக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் புலிகள் சரணாலயம், உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், மிகப்பரந்த வனம் மற்றும் விலங்குகளை, உயரத்தில் இருந்து பார்த்து ரசிக்க வசதியாக, 'ஹாட் ஏர் பலுான் சபாரி' திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது:பந்தவ்கர் வன சரணாலயத்தில், சுற்றுலா பயணியரின் வசதிக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. ஆப்ரிக்க சரணாலயங்கள் போலவே, இங்கும் வனத்தில் சுற்றி வரும் புலி, சிறுத்தை, சாம்பல் கரடி உள்ளிட்ட விலங்குகளை ஹாட் ஏர் பலுானில் இருந்து, பார்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE