டில்லி விவசாயிகள் போராட்டம் அமெரிக்க எம்.பி.,க்கள் கடிதம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்திய அரசுடன் பேச்சு நடத்தும்படி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த, அந்நாட்டு எம்.பி., பிரமிளா ஜெயபால் உட்பட, ஏழு எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டன்:டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்திய அரசுடன் பேச்சு நடத்தும்படி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த, அந்நாட்டு எம்.பி., பிரமிளா ஜெயபால் உட்பட, ஏழு எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கருத்துஇந்த விவகாரத்தில், வட அமெரிக்க நாடான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து, 'ஜனநாயக நாடான இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில், வெளிநாட்டு தலைவர்கள் தலையிடுவதை, இந்தியா விரும்பவில்லை' என, வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமெரிக்க எம்.பி., பிரமிளா ஜெயபால் உட்பட, ஏழு எம்.பி.,க்கள், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் எழுதிஉள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தங்கள் நாட்டு சட்டத்திற்கு இணங்க, தேசிய கொள்கையை தீர்மானிக்கும் இந்திய அரசின் உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.

அதே நேரம், இந்திய அரசு அமல்படுத்தியுள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, தங்கள் பொருளாதார பாதுகாப்பு மீதான தாக்குதலாக, விவசாயிகள் கருதுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் நடந்து வரும் போராட்டத்தை, நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்த புதிய சட்டத்தால், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பலர், நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஆலோசனை

அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிலங்கள், பஞ்சாபில் உள்ளன. எனவே, உறவினர்களின் பாதுகாப்பு குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, வெளிநாடுகளில் அரசியல் பேச்சு சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.அமெரிக்கா, பல அரசியல் போராட்டங்களை பார்த்த நாடு என்பதால், இந்தியாவின் தற்போதைய நிலையை சமாளிக்க, அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X