அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் அனுமதி : நடிகர் ரஜினிக்கு என்னாச்சு?

Updated : டிச 27, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (27+ 63)
Share
Advertisement
சென்னை : ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்ட நடிகர் ரஜினி, ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நடிகர் ரஜினி நடித்து வந்த, 'அண்ணாத்த' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில், டிச., 14ல் துவங்கியது. இதில், ரஜினி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் துவங்கிய படப்பிடிப்பில்,
Rajinikanth, admitted, hospital, Rajini, ரஜினி

சென்னை : ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்ட நடிகர் ரஜினி, ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நடிகர் ரஜினி நடித்து வந்த, 'அண்ணாத்த' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில், டிச., 14ல் துவங்கியது. இதில், ரஜினி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் துவங்கிய படப்பிடிப்பில், படக்குழுவை சேர்ந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, தயாரிப்பு துறையில் இருந்து வெளியான அறிவிப்பில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என, பரிசோதனையில் உறுதியானாலும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, ஐதராபாத்தில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில், ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; விரைவில் குணமடைவார்' என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனை முன், ஊடகத்துறையினர் குவிந்தனர். சந்திரபாபு நாயுடு, தி.முக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும், ரஜினியிடம் மொபைல் போன் வாயிலாக பேசி, நலம் விசாரித்தனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் ரஜினி நலம் பெற வேண்டியுள்ளனர். சிகிச்சை முடிந்து, ரஜினி ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார் என, கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (27+ 63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-டிச-202022:05:34 IST Report Abuse
தல புராணம் BP ரஜினிக்கு தான், ஆனா BJP ஐசியுவில் அட்மிட் ஆயிடிச்சி.. 🤣😀😂
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
26-டிச-202011:16:37 IST Report Abuse
blocked user நலம் பெற்று வர பிரார்த்தனைகள்...
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
26-டிச-202010:49:24 IST Report Abuse
Unmai vilambi GET WELL SOON. இதை காரணம் காட்டி அடுத்த ஒரு வருடத்திற்கு உங்கள் அரசியல் பிரவேசத்தை இழுக்காமல் இருந்தால் சரி .
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
27-டிச-202000:49:45 IST Report Abuse
தல புராணம்மோடிஜி விடமாட்டாப்புலே.. இந்த மண்குதிரையை நம்பி பொழைப்பு நடத்த வந்த சங்கி கூட்டமும் விடாது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X