பொது செய்தி

இந்தியா

புதிதாக கொரோனா தொற்று இல்லாத தாராவி

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் தாராவியில் இன்று முதல் முறையாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற ஆறுதல் செய்தி மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி உள்ளது. இங்கு மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம். வெறும் 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் தாராவியில் இன்று முதல் முறையாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற ஆறுதல் செய்தி மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.



latest tamil news



ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி உள்ளது. இங்கு மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம். வெறும் 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ், கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி தாராவியில் பரவியது. மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகம் என்பதால் தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவியது.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மத்திய, மாநில அரசுகள் தாராவியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தினர். அதன் பயனாக அங்கு கொரோனா வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.நேற்றைய நிலவரப்படி தாராவியில் 3 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 460 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 16 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.


latest tamil news



இந்நிலையில், தாராவியில் இன்று புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட வில்லை. இந்த நற்செய்தி மக்களிடையே புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X