எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியில் குழப்பம்?

Updated : டிச 26, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும், பா.ஜ., மேலிடம் தெளிவான முடிவை அறிவிக்காததால், கூட்டணியில் குழப்பமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டன.அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆனால்,
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி, குழப்பம்

அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும், பா.ஜ., மேலிடம் தெளிவான முடிவை அறிவிக்காததால், கூட்டணியில் குழப்பமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டன.

அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள், இன்னமும் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பி வருகின்றன.தமிழக பா.ஜ., தலைவர் முருகனும், துணைத் தலைவர் அண்ணாமலையும், 'கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை, பா.ஜ., தேசிய தலைமை அறிவிக்கும்' எனக்கூறி வருகின்றனர்.நேற்று சென்னை வந்த, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அவரிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து கேட்ட போது, அங்கு வந்திருந்த அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணனை சுட்டிக்காட்டி, ''எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை; நீங்கள் தான் குழப்புகிறீர்கள்,'' என்றார்.முதல்வர் வேட்பாளர் குறித்து, நேரடியாக பதில் அளிப்பதை தவிர்த்தார். இதனிடையே, 'சீட்' பேரம் தொடர்பாகவும், கூட்டணிக்குள் குழப்பம் நீடிப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., தரப்பில், பா.ஜ.,விற்கு, 20 முதல், 25 இடங்கள்; பா.ம.க.,விற்கு, 15 இடங்கள் மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை இரு கட்சிகளும் ஏற்கவில்லை.

ரஜினி கட்சி ஆரம்பித்த பின், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை இறுதி செய்ய, இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதனாலும், 'சீட்' பேரத்தை அதிகரிக்கவும், முதல்வர் வேட்பாளர் குறித்து, வாய் திறக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்த குழப்பத்திற்கு தீர்வு காண, கூட்டணி கட்சி தலைவர்களை, மூத்த அமைச்சர்கள் ரகசியமாக சந்தித்து பேசி வருகின்றனர். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குழப்பம் குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:எங்கள் கட்சியை பொறுத்தவரை, கூட்டணி, முதல்வர் வேட்பாளர் என, அனைத்தையும், தேசிய தலைமை தான் அறிவிக்க வேண்டும்.

மாநில அளவில், நாங்கள் எதையும் கூற முடியாது. எனவே, 'முதல்வர் வேட்பாளரை, தேசிய தலைமை முடிவு செய்யும்' என, எங்கள் கட்சியினர் கூறி வருகின்றனர்.இதை, அ.தி.மு.க.,வினர் புரிந்து கொள்ளாமல், எங்களை விமர்சித்ததால் தான், கூட்டணிக்குள் குழப்பம் என்ற நிலை ஏற்பட்டது. இந்த விபரம், அ.தி.மு.க., தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal,சவுதி அரேபியா
28-டிச-202011:31:57 IST Report Abuse
Raj நிதிஷ் தோலில் சவாரி செய்து கொண்டு, அவருக்கே ஆப்பு வைத்தவர்கள். உசார் ....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-டிச-202023:00:55 IST Report Abuse
Vijay D Ratnam பாஜக ரஜினியோடு கூட்டணியோடு வைத்துக்கொள்ளட்டும். ஒன்று வெந்தது வேகாதது இன்னொன்று நொந்தது நூலானது, அது இரண்டுக்கும் ஜோடி பொருத்தம் சிறப்பாக இருக்கும். அதிமுக பாஜகவை கழட்டிவிட்டு விட்டு பாமக, தமாகா, புதிய தமிழகம், மேலும் சில சிறிய கட்சிகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணியமைத்து போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். காலை சுற்றிய பாம்பை லாவகமாக கழட்டி வீசுங்கள் அதிமுக தலைவர்களே. கேட்டால் புரட்சித்தலைவி வழிதான் எங்கள் வழி என்று சொல்லிவிட்டு போயி வேலையை பாருங்கள். நோட்டாவோடு போட்டிபோடுற கும்பல்களெல்லாம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுகவை மிரட்டி பார்க்கிறது. பாஜகவை உடன் வைத்துக்கொண்டால் இஸ்லாமிய கிருஸ்தவ வாக்குகள் அரை சதவிகிதம் கூட அதிமுகவுக்கு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
சிவ.இளங்கோவன் . - நாளைய முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
27-டிச-202017:34:43 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . விழித்துக்கொள்ளுங்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X