பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சாபில் இருந்து வரத்து அதிகரிப்பு மால்டா ஆரஞ்சு ரூ.50க்கு விற்பனை

Added : டிச 25, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வரத்து அதிகரித்ததால் மால்டா ஆரஞ்சு பழம் கிலோ ரூ.50க்கு ராமநாதபுரத்தில் விற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையும் கமலா ஆரஞ்ச் பழங்கள் தான் தமிழகத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு வரும். அதே போல் தடிமனான தோல் கொண்ட வெளிநாட்டு ஆரஞ்சு பழங்களும் விற்பனைக்கு வருகிறது.சில ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் அதிகஅளவில் விளையும் மால்டா

ராமநாதபுரம் : பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வரத்து அதிகரித்ததால் மால்டா ஆரஞ்சு பழம் கிலோ ரூ.50க்கு ராமநாதபுரத்தில் விற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையும் கமலா ஆரஞ்ச் பழங்கள் தான் தமிழகத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு வரும். அதே போல் தடிமனான தோல் கொண்ட வெளிநாட்டு ஆரஞ்சு பழங்களும் விற்பனைக்கு வருகிறது.சில ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் அதிகஅளவில் விளையும் மால்டா ஆரஞ்சு பழங்களும் தமிழகத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. இந்த பழங்களின் தோல் தடிமனாகவும், தட்டையாகவும் உள்ளது. அதிக புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் அதிக சாறு கொண்டதாக உள்ளது.

இவற்றை மால்டா ஆரஞ்சு அல்லது கின்னு ஆரஞ்சு என அழைக்கின்றனர்.தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரத்தை சேர்ந்த வியாபாரி சரவணன் கூறுகையில், 15 ஆண்டுகளாக பழ வியாபாரம் செய்கிறேன். விலை குறைவாக உள்ள பழங்களை மட்டுமே வாங்கி விற்கிறேன். தற்போது மால்டா ஆரஞ்சு விலை குறைவாக உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X