ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் கட்டடப்பணிகள் நடக்கிறது.
இந்நிலையில், கொரோனாவிற்கு பிறகு இங்குள்ள சில சிகிச்சை பிரிவுகள் செயல்படுவதே இல்லை. செயல்பட்டாலும் உரிய டாக்டர்கள் வருவதில்லை. குறிப்பாக பல், கண், எலும்பு மருத்துவ சிகிச்சைகள் இன்னும் முழுவீச்சில் துவங்கவில்லை.மருத்துவமனையின் முன்பகுதியிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் முதல் தளத்தில் செயல்படும் எக்கோ பரிசோதனை மையம் பெயரளவில் தான் செயல்படுகிறது. இங்கு பரிசோதனைக்கு வர வேண்டிய டாக்டர்வருவதே இல்லை.அவருக்கு பதில், எக்கோ பயிற்சி பெறாத டாக்டர் ஒருவர் வந்து செல்கிறார்.
இருதய சிகிச்சை குறித்தோ, எக்கோ பரிசோதனையில் முழுமையான அனுபவம் இல்லாத அவரால் அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவதில்லை. பிரசவத்திற்கு முன் இருதய பிரச்னை குறித்து அறிவதற்காக கட்டாயம் கர்ப்பிணிகளுக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதுபோல் மாவட்டம் முழுவதும் இருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் தினசரி 30 பேர் வரை எக்கோ பரிசோதனைக்கு காத்திருக்கின்றனர்.
பரிசோதனை செய்ய முடியாததால், தனியார் எக்கோ பரிசோதனை மையங்களை தேடிச் செல்கின்றனர். இதுகுறித்து மருத்துவக்கல்லுாரி டீன் அல்லியிடம் கேட்ட போது, மருத்துவமனை முழுமையாக மருத்துவக் கல்லுாரிக்கு ஒப்டைக்கப்படாததால் இதுகுறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் அல்லது மருத்துவமனை கண்காணிப்பாளரை கேளுங்கள், என்றார்.இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் ராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோரை பலமுறைதொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE