அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆதரவாளர்களுக்கு அழகிரி கடிதம் ஜன., 3ல் மதுரை வரும்படி அழைப்பு

Added : டிச 25, 2020
Share
Advertisement
மதுரை:'தி.மு.க.,விற்கு எதிராக புதிய கட்சி துவங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த, ஆதரவாளர்கள் அனைவரும், ஜன., 3ல் மதுரை வாருங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.வரும் சட்டசபை தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு, மீண்டும் கட்சியில் இணையும்படி அழைப்பு வரும் என, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் காத்திருந்தனர். ஆனால்,

மதுரை:'தி.மு.க.,விற்கு எதிராக புதிய கட்சி துவங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த, ஆதரவாளர்கள் அனைவரும், ஜன., 3ல் மதுரை வாருங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு, மீண்டும் கட்சியில் இணையும்படி அழைப்பு வரும் என, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் காத்திருந்தனர். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டு கொள்ளவில்லை.அதிருப்தியடைந்த அழகிரி ஆதரவாளர்கள், கருணாநிதி பெயரில் புதிய கட்சி துவங்கி, தென் மாவட்டங்களில், தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க வேண்டும் என, உறுதி ஏற்றுள்ளனர்.

'தி.மு.க.,வில் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை' என அறிவித்த அழகிரி, தனிக்கட்சி துவங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். சென்னையில், தன் தாய் தயாளுவை சந்தித்த பின், 'ஜன., 3ல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவேன்' என்றார். மறுநாளே, கருணாநிதி ஸ்டைலில் ஆதரவாளர்களுக்கு கடிதம் வாயிலாக, அழைப்பும் விடுத்து, வேகம் காட்டியுள்ளார்.

கடிதத்தில், 'வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். 'தமிழகம் முழுதும் உள்ள ஆதரவாளர்கள், ஜன., 3ல் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள, துவாரகா பேலசில் தவறாமல் பங்கேற்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:ஸ்டாலினுக்கு எதிராக தனிக்கட்சி துவங்க, தற்போது அழகிரி வேகம் காட்டியுள்ளார். ஸ்டாலின், உதயநிதியால் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், சீனியர் நிர்வாகிகள் பலர், அழகிரியுடன் பேசி, முக்கிய ஆலோசனை தெரிவித்துள்ளனர். கூட்டத்தில், மதுரை தி.மு.க., நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். நிர்வாகிகள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X