பொது செய்தி

தமிழ்நாடு

வண்ணாங்குண்டு இளைஞர்கள் உருவாக்கிய கிராம நுாலகம்

Added : டிச 25, 2020
Share
Advertisement
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால், நுாலகம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. வண்ணாங்குண்டு ஊராட்சியில் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 2-020 பிப்ரவரியில் பயன்பாட்டில் இல்லாதஅரசுக்கட்டடத்தை சீரமைத்த இளைஞர்கள், அதனை கிராமப்புற நுாலகமாக மாற்றியுள்ளனர்.ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ், வெங்கடேஷ்வரன், கோகுலகிருஷ்ணன்
 வண்ணாங்குண்டு இளைஞர்கள் உருவாக்கிய கிராம நுாலகம்

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால், நுாலகம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.

வண்ணாங்குண்டு ஊராட்சியில் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 2-020 பிப்ரவரியில் பயன்பாட்டில் இல்லாதஅரசுக்கட்டடத்தை சீரமைத்த இளைஞர்கள், அதனை கிராமப்புற நுாலகமாக மாற்றியுள்ளனர்.ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ், வெங்கடேஷ்வரன், கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:கிராமமக்களிடம் சென்று, வீடுகள்தோறும் பழைய, புத்தகங்களை இலவசமாக வாங்கி அலமாரிகளில் பிரிவு வாரியாக அடுக்கி வைக்கிறோம்.போட்டித்தேர்வுகளுக்கு தேவைப்படும் புத்தகங்களை நுாலகங்களில் வைத்துள்ளோம்.

-அலைபேசிக்கு ஓய்வு கொடுக்கச் சொல்லிவிட்டு, தினமலர் நாளிதழ், பட்டம் உள்ளிட்ட நாளிதழ்களை படிக்க வழங்குகிறோம். நுாலகக் கட்டடத்தில்தேசியத் தலைவர்களின் ஓவியங்களும், பள்ளி மாணவர்களின் கலைநய படைப்புகளும் அலங்கரிக்கின்றன.எங்களது முயற்சிக்கு ஊராட்சி நிர்வாகத்தினரும், கிராம மக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். புத்தகங்கள், நாளிதழ்களை வாசிக்கும் திறனை இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X