போலீசை கண்டித்து பா.ஜ., சாலை மறியல்

Added : டிச 25, 2020
Share
Advertisement
நெட்டப்பாக்கம்: பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை நீக்க வலியுறுத்தியும் கரியமாணிக்கத்தில் பா.ஜ., நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் ரதயாத்திரை நடந்தது. அப்போது பா.ஜ., மற்றும் காங்., நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் பா.ஜ., நிர்வாகிகள் மீது போலீசார்

நெட்டப்பாக்கம்: பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை நீக்க வலியுறுத்தியும் கரியமாணிக்கத்தில் பா.ஜ., நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் ரதயாத்திரை நடந்தது. அப்போது பா.ஜ., மற்றும் காங்., நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் பா.ஜ., நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைக் கண்டித்து பா.ஜ., வினர் நேற்று காலை 10:00 மணிக்கு, ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, பா.ஜ., நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கு நகல்களை எரித்தனர்.தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம், எஸ்.பி., ரங்கநாதன், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புகார் குறித்து விசாரிப்பதாக எஸ்.பி., உறுதியளித்தார். அதனையேற்று, பா.ஜ.,வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X