கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.16 லட்சம் வைப்பு தொகை மின் வாரியம் வழங்க உத்தரவு

Added : டிச 25, 2020
Share
Advertisement
சென்னை:சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர் செலுத்திய, 16 லட்சம் ரூபாய் பிணை வைப்பு தொகையை திரும்ப செலுத்துமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறைதீர்ப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை, எருமையூரை சேர்ந்த சங்கர், மின் குறைதீர்ப்பாளரிடம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு:எருமையூரில், வேலாயுதம் என்ற பெயரில் உள்ள இரு மின் இணைப்புகளையும், சங்கர்

சென்னை:சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர் செலுத்திய, 16 லட்சம் ரூபாய் பிணை வைப்பு தொகையை திரும்ப செலுத்துமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறைதீர்ப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, எருமையூரை சேர்ந்த சங்கர், மின் குறைதீர்ப்பாளரிடம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு:எருமையூரில், வேலாயுதம் என்ற பெயரில் உள்ள இரு மின் இணைப்புகளையும், சங்கர் பெயரில் உள்ள இரு இணைப்புகளையும் ஒன்றாக்கி, உயரழுத்த மின் இணைப்பாக மாற்றினால், மின்சார கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக, சில மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதை நம்பி, உயரழுத்த இணைப்பிற்காக, மின் வாரிய அலுவலகத்தில், 2018 நவ., 3ல் விண்ணப்பம் அளித்தேன்; அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பின், 2019 மே, 21ல் வழங்கிய கடிதத்தில், முன்பணமாக, 16 லட்சம் ரூபாய் செலுத்துமாறு குறிப்பிடப்பட்டது. அந்த தொகை, அம்மாதம், 24ம் தேதி செலுத்தப்பட்டது. அதற்கு பின் நடவடிக்கை எடுக்காததால், மேற்பார்வை பொறியாளரிடம் முறையிட்டேன்.அப்போது, காலதாமதமாகி விட்டதால், வாரிய அதிகாரிகளுக்கு பிரச்னை ஏற்படும் என்றும், விண்ணப்பத்தை ரத்து செய்தால், 16 லட்சம் ரூபாயை திருப்பி கொடுப்பதாக, மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.

விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டும், பணம் தரவில்லை. அதை வட்டியுடன் திருப்பி தர அல்லது மின் இணைப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.அதை விசாரித்து, மின் குறைதீர்ப்பாளர் விடுத்து உள்ள உத்தரவு:மேல்முறையீட்டாளரின் இரு இணைப்புகளை தவிர, வேறொருவர் பெயரில் உள்ள இரு இணைப்புகளையும் ஒன்றாக சேர்த்து, உயரழுத்த இணைப்பு பெற சமர்ப்பித்த விண்ணப்பத்தை அனுமதித்தது, ஆரம்ப நிலையிலேயே ஏற்பட்ட தவறு.

மின் இணைப்பு வழங்க, எந்த ஒரு பணியையும், மின் வாரிய பொறியாளர்கள் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு உள்ள சமயத்தில், விதிகளின்படி, பிணை வைப்பு தொகையை திருப்பி அளிக்க இயலாது என்ற, வாதம் ஏற்புடையதாக இல்லை.மின் இணைப்பு கோரும் வளாகம், மேய்க்கால் புறம்போக்கு என்று அறிந்த நிலையில், விண்ணப்பத்தை பதிவு செய்து, பதிவு கட்டணம், பிணை வைப்பு தொகையை செலுத்த கோரியது, மின் வாரியத்தின் தவறு. எனவே, மேல்முறையீட்டாளர் செலுத்திய வைப்பு தொகை, 16 லட்சம் ரூபாயை, தனி நிகழ்வாக கருதி திரும்ப வழங்குமாறு, மின் வாரியத்திற்கு ஆணையிடப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X