சென்னை:ரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்பட்ட நடிகர் ரஜினி, ஐதராபாதில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் ரஜினி நடித்து வந்த, அண்ணாத்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாதில், டிச., 14ல் துவங்கியது. இதில், ரஜினி, நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்றனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் துவங்கிய படப்பிடிப்பில், படக்குழுவைச் சேர்ந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
உறுதியானது
இது குறித்து, பட தயாரிப்பு பிரிவினரிடம் இருந்து வெளியான அறிவிப்பில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது என, தெரிவிக்கப்பட்டுள்ளது; படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளது.ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என, பரிசோதனையில் உறுதி யானாலும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, நேற்று ஐதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ரஜினி அனுமதிக்கப்பட்டார்.
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; விரைவில் குணமடைவார்' என, தெரிவிக்கப்பட்டது. நலம் விசாரிப்புஇதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனை முன், ஊடகத் துறையினர் குவிந்தனர்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும், ரஜினியிடம் மொபைல் போன் வாயிலாக பேசி, நலம் விசாரித்தனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களும், ரஜினி நலம் பெற வேண்டியுள்ளனர். சிகிச்சை முடிந்து, ரஜினி ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார் என, கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE