அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

Added : டிச 25, 2020
Share
விழுப்புரம்: விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியில் நகர ஜெ., பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நகர ஜெ., பேரவை தலைவர் கோல்டுசேகர் தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மலர்துாவி மரியாதை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர்

விழுப்புரம்: விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியில் நகர ஜெ., பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நகர ஜெ., பேரவை தலைவர் கோல்டுசேகர் தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மலர்துாவி மரியாதை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், இளைஞரணி செயலாளர் பசுபதி, மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி முருகன். உள்பட இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.வானூர்:

கிளியனூர் ஒன்றிய அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் காட்ராம்பாக்கம் கிராமத்தில் எம்.ஜி.ஆர்.,நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல்ராஜ் ஏற்பாட்டின் படி, நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர்பக்தவச்சலம் எம்.ஜி.,ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி சந்தியா, பேரவை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய அவைத்தலைவர்ஜெயராமன், மகளிர் அணி செயலாளர் சிவரஞ்சினி, இணை செயலாளர் இந்திரா குமார், பொருளாளர் நாராயணன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அஜித்துல்லா, தகவல் தொழில்நுட்பப்பிரிவுதலைவர் பரத்குமரன், மாணவரணி செயலாளர் சந்திரமோகன், விவசாய அணி பொருளாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:

ஒலக்கூர் கூட்ரோட்டில், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி., ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் பன்னீர் தலைமையில், எம்.ஜி.,ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமி, முன்னாள் கவுன்சிலர் சுப்ரமணியன், ஓங்கூர் கூட்டுறவு சங்க துணை தலைவர் சங்கர், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் ராஜசேகரன், இளைஞர் அணி துணைத் தலைவர் முருகன், எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞரணி செயலாளர் நீலமேகம், மாணவரணி துணைத் தலைவர் பாரதி, முன்னாள் இலக்கிய அணி இணை செயலாளர் பாக்யராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:

திண்டிவனத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமையில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி.,ஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார்,ஸ்ரீதர்,நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், மாவட்டஎம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை தலைவர் அய்யப்பன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் குமரன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்செல்வம், நுகர்வோர் அமைப்பு மணி, வழக்கறிஞர் ெஹன்றிஜோசப், மகளிர் அணி மீனா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் பனையபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தி,அன்னதானம் வழங்கினர்.ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ஜோதிராஜா, இளைஞரணி செயலாளர் நரசிம்மன், மாணவரணிசெயலாளர் கோபாலகிருஷ்ணன், தலைவர் அசோகன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாங்கம், தயாநிதி கண்ணப்பன், தொரவி சுப்ரமணி, பாசறை செயலாளர் சுபாகர், இலக்கிய அணி செயலாளர் ஓம்சக்தி, மகளிர் அணி செயலாளர் சிவகாமி லட்சுமணன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய அணிசெயலாளர் திருசங்கு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டுரங்கன் கலந்து கொண்டார்.விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., நினைவு தினம் நிகழ்ச்சிக்கு மாநிலபொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல்,ஆசிரியர் மகாலிங்கம்,வங்கி இயக்குனர்கள் ராஜேந்திரன்,சேட் கணபதி, கங்காதரன், செல்வராஜ்,மேலவை பிரிதிநிதிகள் சின்னராஜ், அன்பழகன், தங்கவேல், பாசறை செயலாளர்கள் சக்தி,கண்ணன், பார்த்திபன், பரணி,கிளை நிர்வாகிகள் ராமமூர்த்தி, அருள், பிரேம்குமார், பச்சையப்பன், செல்லையா மாஸ்டர்நரேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருவெண்ணெய்நல்லுார்:

திருவெண்ணெய்நல்லுாரில் எம்.ஜி.ஆர்., 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விழாவில் திருவெண்ணெய்நல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார். திருவெண்ணெய்நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர அவைத்தலைவர் வேலாயுதம், எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலாளர் சுந்தரம், ஐ.டி., பிரிவு நகர செயலாளர் பாலுபாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பிரேம்குமார், கூட்டுறவு வங்கி துணை தலைவர் முருகன், வார்டு செயலாளர்கள் முருகன், மோகன், ஸ்ரீதர், செந்தில், வேலு, செல்வமுருகன், சுல்தான் அலி, கர்ணா, பாபு, செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.திண்டிவனம்:

ஒலக்கூர் கூட்ரோட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பொன்மலர் தயாளன் தலைமையில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தனசேகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் நீலமேகம், மகளிர் அணி செயலாளர் கீதாஞ்சலி, ஒன்றிய பாசறை துணை செயலாளர் விக்கி, நிர்வாகிகள் பிரகாஷ், துரைராஜ், அருள், முத்துகிருஷ்ணன், சங்கர், கண்ணதாசன், பாலாஜி, ஜெயமுருகன், குணா, செந்தில், சீனு, ஏழுமலை, பிரகாஷ், சிவா, விநாயகம், விமல், வேல் உள்ளிட்ட பலர்திண்டிவனம்:

திண்டிவனம் தொகுதி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், கீழ்சேவூர் கிராமத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.,ஆரின் 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் நீலமேகம் தலைமையில், எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பொன்மலர்தயாளன், கிளைக்கழக செயலாளர் பட்டாபி, பார்த்தீபன், முனுசாமி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழுப்புரம்:

விழுப்புரம், வண்டிமேடு பகுதியில் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.விழுப்புரம் 3வது வார்டுக்கு உட்பட்ட வண்டிமேடு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஏழை மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், இளைஞரணி செயலாளர் பசுபதி, நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், வார்டு நிர்வாகிகள் ராஜாராமன், கவுதம், பன்னீர்செல்வம், கஜேந்திரன், சபரிநாதன், குமார், அகமது, சிராஜீதீன், தமிழ்செல்வன், ஆனந்த், விமல், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.,ஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், எம்.ஜி.ஆர்.படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் ரங்கநாதன், விவசாய அணி செயலாளர் சீனு, ராஜேந்திரன், பேரவை செயலாளர் செந்தமிழ்,சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபுல்பாய், மாவட்ட பிரதிநிதி ஜெகதீசன், ஒன்றிய பாசறை செயலாளர் பன்னீர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமதாஸ், நிர்வாகிகள் பாண்டுரங்கன், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சீனுவாசன், பெருமாள், ராமமூர்த்தி, ரமேஷ், குமார், சந்திரசேகரன், தமிழரசன், சிவா, ஆதாம், ராஜேஷ், மோகன், ஏழுமலை, செந்தில், ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழுப்புரம்:

விழுப்புரம் மாதாகோவில் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நகர செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், நகர இளைஞரணி செயலாளர் குமரன், பால்ராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் மல்லிகா, நகர மகளிரணி செயலாளர் நந்தினி, ஒன்றிய இளைஞரணி திருமலை, வார்டு செயலாளர் கணேஷ் சக்திவேல், நிர்வாகிகள் மோகன், சக்திவேல், எம்.ஜி.ஆர்., மன்றம் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், நகர மாணவரணி துணை செயலாளர் பிரபு, ஜெ. பேரவை முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்;

திண்டிவனம், காந்தி சிலை அருகில் நடந்தஎம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் தலைமை தாங்கி மலர் அஞ்சலி செலுத்தினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வழக்கறிஞர்ஜெயபிரகாஷ் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், நகர அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் தளபதி ரவி, நகர நிர்வாகிகள் திருமகள், ராஜேந்திரன், ஸ்ரீதர்சங்கர், நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், நகர மாணவரணி செயலாளர் பிரகாஷ், நகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுரேஷ், நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெற்றிவேல்,ஈஸ்வர், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், சக்திவேல், ஜாகீர்உசேன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:

திண்டிவனம் அருகே சாரத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம், சாரத்திலுள்ள பி.டி.ஓ., அலுவலகம் எதிரில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆர்.,படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சத்தியகாமன், ஒன்றிய பாசறை இணை செயலாளர் காளிபிரதாப், ஒன்றிய நிர்வாகிகள் சாமிதுரை, அசோக், புருேஷாத்தமன், சக்திராம்குமார், கர்ணன், முனுசாமி, பாஸ்கர், ராஜவேல், சக்தி, ராம்பிரசாத், சிங்காரம், முருகன், குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X