திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க, தேர்வு முகாம் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 'அலிம்கோ' நிறுவனம் வாயிலாக, 'இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் பிரைவேட் லிமிடெட்' 'சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன், பேட்டரியால் இயங்கும், மூன்று சக்கர வண்டி மற்றும் சக்கர நாற்காலி, ஊன்றுகோல்.சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால் மற்றும் கை, காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான தேர்வு முகாம், வரும், 28 -- 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம் - 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.முகாம் நடைபெறும் இடங்கள் விபரம்:டிச., 28ம் தேதி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்ல, காலை, 10:00 - 1:00 மணி; புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளி, ஆவடி-, மதியம், 2:00 - 5:00 மணி.டிச., 29ம் தேதி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னேரி. காலை, 9:00 - 1:00 மணி; கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மிடிப்பூண்டி- மதியம், 2:00 - 5:00 மணி.டிச., 30ம் தேதி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி- காலை, 9:00 - 1:00 மணி; -அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.கே.பேட்டை மதியம், 2:00 - 5:00 மணி.டிச. ,31ம் தேதி, டி.இ.எல்.சி., பள்ளி, பெரியகுப்பம், திருவள்ளுர் காலை, 9:00 - 1:00 மணி; அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியபாளையம் மதியம், 2:00 - 5:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE