பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டில், கரும்பு அறுவடை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.
வரும் பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால், வெளி மாநில கரும்பு வெட்டு தொழிலாளர்கள், நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றனர்.பள்ளிப்பட்டு சுற்றுப் பகுதியில், கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விளையும் கரும்பு, அறுவடை செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம், நகரி, நலவாய், காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும், தனியார் கரும்பு ஆலைக்கும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், அனுப்பி வைக்கப்படுகிறது.அக்டோபர் மாதம் முதல், மார்ச் மாதம் வரை நடக்கும் கரும்பு அறுவடைக்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, வெட்டு தொழிலாளர்கள், புலம் பெயர்ந்து வருகின்றனர்.
தற்போது, முழுவீச்சில் நடந்து வரும் கரும்பு வெட்டுப் பணிகள், வரும் பொங்கல் பண்டிகையின் போது நிறுத்தி வைக்கப்படும்.கரும்பு வெட்டு தொழிலாளர்கள், மகர சங்கராந்தி பண்டிகையை கொண்டாடுவதற்காக, ஆந்திர மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர்.பண்டிகை தேவையை ஈடு செய்யும் விதமாக, தற்போது, நேரம் காலம் பார்க்காமல், முழு வீச்சில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE