பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : டிச 25, 2020
Share
Advertisement
இளைஞர் விழா போட்டிதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 24வது தேசிய இளைஞர் விழா, வரும், 29 - ஜன.19 வரை, நடத்தப்பட உள்ளது. இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலை, எழுத்தாற்றல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு, என, ஏழு வகை பிரிவுகளில், 18 வகையான போட்டி நடத்தப்படும்.வயது வரம்பு, 29. ஆர்வம், தகுதி உள்ளவர்கள், பங்கேற்கவும், மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, dsotvlr@gmail.com என்ற இ --

இளைஞர் விழா போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 24வது தேசிய இளைஞர் விழா, வரும், 29 - ஜன.19 வரை, நடத்தப்பட உள்ளது. இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலை, எழுத்தாற்றல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு, என, ஏழு வகை பிரிவுகளில், 18 வகையான போட்டி நடத்தப்படும்.வயது வரம்பு, 29. ஆர்வம், தகுதி உள்ளவர்கள், பங்கேற்கவும், மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, dsotvlr@gmail.com என்ற இ -- மெயில் மற்றும், 74017 03482 என்ற மொபைலிலும், தொடர்பு கொள்ளுமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பொன்னையா தலைமையில், காணொலி காட்சி மூலம் நடந்தது.பயறு சாகுபடி செய்யும் விவசாயி மற்றும் மீனவ குடும்ப விவசாயிகளுக்கு, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம், சுழற்கலப்பை மற்றும் உழவர் கடன் அட்டை வழங்கினார்.காணொலி காட்சி கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், ஜெகன்னாதபுரம், குருவாயல், காரணி நிஜாம்பட்டு, வெண்பாக்கம், திருவாலங்காடு ஆகிய இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுகோள் வைத்தனர்.

குடிநீர் குழாய் சீரமைப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில், குடிநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் வீணாகி அருகில் இருந்த, கழிவு நீர் கால்வாயில் சேர்ந்தது.இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் உடைந்த குடிநீர் குழாயை சீர்படுத்தியது.

திறன் வளர் பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர், 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' மற்றும், 'பெல்ஸ்டார்' இணைந்து, 18 - 40 வயதிற்கு உட்பட்ட, மகளிர் குழுவினருக்கு, சுய தொழில் செய்திட திறன் வளர்க்கும் பயிற்சி தொடங்கப்பட்டது.வேப்பம்பட்டு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், 25 பெண்கள், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவது பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

சலவை தொழிலாளர்கள் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டரிடம், திருத்தணி வட்டார சலவை தொழிலாளர் சங்கத்தினர், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருத்தணி சலவைத் துறையில் சுற்றுச்சுவர் இல்லாததால், கழிப்பிடமானதால், துணி துவைக்க இயலவில்லை. சுற்றுச்சுவர் மற்றும் தரைத்தளம் அமைத்து தர வேண்டும்.மேலும், சலவைத்தொழிலாளர் குடும்பத்தினருக்கு, இலவச வீட்டு மனை பட்டா கோரி, பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இளைஞர் விழா போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 24வது தேசிய இளைஞர் விழா, வரும், 29 - ஜன.,19 வரை நடத்தப்பட உள்ளது. இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலை, எழுத்தாற்றல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு, என, ஏழு வகை பிரிவுகளில், 18 வகையான போட்டி நடத்தப்படும்.வயது வரம்பு, 29. ஆர்வம், தகுதி உள்ளவர்கள், பங்கேற்கவும், மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, dsotvlr@gmail.com என்ற இ -- மெயில் மற்றும், 74017 03482 என்ற மொபைலிலும், தொடர்பு கொள்ளுமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பொன்னையா தலைமையில், காணொலி காட்சி மூலம் நடந்தது.பயறு சாகுபடி செய்யும் விவசாயி மற்றும் மீனவ குடும்ப விவசாயிகளுக்கு, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம், சுழற்கலப்பை மற்றும் உழவர் கடன் அட்டை வழங்கினார்.காணொலி காட்சி கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், ஜெகன்னாதபுரம், குருவாயல், காரணி நிஜாம்பட்டு, வெண்பாக்கம், திருவாலங்காடு ஆகிய இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுகோள் வைத்தனர்.

குடிநீர் குழாய் சீரமைப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் வீணாகி, அருகில் இருந்த, கழிவு நீர் கால்வாயில் சேர்ந்தது.இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உடைந்த குடிநீர் குழாயை பேரூராட்சி நிர்வாகம் சீர்படுத்தியது.

திறன் வளர் பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர், 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' மற்றும், 'பெல்ஸ்டார்' இணைந்து, 18 - 40 வயதிற்கு உட்பட்ட மகளிர் குழுவினருக்கு, சுய தொழில் செய்திட திறன் வளர்க்கும் பயிற்சி துவங்கப்பட்டது.வேப்பம்பட்டு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், 25 பெண்கள், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

சலவை தொழிலாளர்கள் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டரிடம், திருத்தணி வட்டார சலவை தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருத்தணி சலவை துறையில் சுற்றுச்சுவர் இல்லாததால், கழிப்பிடமானதால், துணி துவைக்க இயலவில்லை. சுற்றுச்சுவர் மற்றும் தரை தளம் அமைத்து தர வேண்டும்.மேலும், சலவை தொழிலாளர் குடும்பத்தினருக்கு, இலவச வீட்டு மனை பட்டா கோரி, பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இன்று சுனாமி நினைவு தினம்

மாமல்லபுரம்: கடந்த, 2004, டிச., 26ல், இந்தோனேஷிய கடலில், சுனாமி பேரலை உருவாகி, தமிழக கடற்கரை பகுதியையும் தாக்கியது.சென்னை, பழவேற்காடு பகுதி துவங்கி, கன்னியாகுமரி வரை, பல்லாயிரம் பேர் இறந்தனர். மீனவர், கடலுக்கு இரையாகி, வீடுகள், உடைமைகளை இழந்தனர்.இத்துயரம் நிகழ்ந்து, 16 ஆண்டுகள் கடந்து, மீனவர், ஆண்டுதோறும் இந்நாளை நினைவு கூர்கின்றனர்.அன்றைய தினம் மீன்பிடி தவிர்த்து, கடலில் பால் வார்த்து, மலர்கள் துாவி, கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி, மவுன ஊர்வலம் சென்று, அஞ்சலி செலுத்துவர். இந்நாளான இன்று, செங்கல்பட்டு மாவட்ட மீனவ பகுதிகளில், நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்துகின்றனர்.

198 பசுக்களுக்கு சிகிச்சை

வாலாஜாபாத்: தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் ஆர்லிகான் பிரிக்சன் சிஸ்டம் நிறுவனம் இணைந்து, வாலாஜாபாத் அடுத்த, கிதிரிப்பேட்டை கிராமத்தில், கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.அரசு கால்நடை மருத்துவர் முகமது இர்சாத் தலைமையிலான கால்நடை மருத்துவக்குழுவினர், தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை ஊசி என, பல தரப்பு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.இதில், 198 பசுக்கள்; 83 செம்மறியாடுகள்; 62 வெள்ளாடுகள்; ஒரு எருமை; 35 கோழிகளுக்கு பல வித சிகிச்சைள் அளிக்கப்பட்டன.

29ல் 'காஸ்' குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:எரிவாயு நுகர்வோருக்கு, எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், நுகர்வோர் குறைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம், எண்ணெய் நிறுவனங்களின் விதிகளுக்கு உட்பட்டு, எரிவாயு உருளை வினியோகத்தை சீர்படுத்த, வரும், 29ல் காஸ் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.காலை, 11:00 மணிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட எரிவாயு நுகர்வோர் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X