திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயதிற்கு மேற்பட்ட காது கேளாத மற்றும் வாய் பேசாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 'ஸ்மார்ட் போன்' பெற விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காது கேளாத, வாய் பேசாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கப்பட உள்ளது.எனவே, தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவள்ளுர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE