மதுரை:''தி.மு.க., உண்ணாவிரத போராட்டத்தில், எஸ்ரா சற்குணம் பேசியது, தேசத்திற்கு எதிரானது,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:ஹிந்து என்பது ஒரு மதம் அல்ல; அது வாழ்வியல் முறை. இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம், வாழ்வியல் முறை தான் ஹிந்து, ஹிந்துத்துவா. அதை, உச்ச நீதிமன்றம் கூட குறிப்பிட்டுள்ளது.இந்த தேசத்திலுள்ள அனைவராலும் ஏற்கப்பட்டது, ஹிந்து வாழ்வியல் முறை. அதற்கு எதிராக, எஸ்ரா சற்குணம் பேசியது, தேசத்திற்கு எதிரானதாகும். அவர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர், தி.மு.க., மேடையில் பேசியிருக்கிறார். கடவுள் மறுப்பு என்ற கொள்கையை தி.மு.க., எல்லா தரப்பிலும் சமமாக பாவிக்க வேண்டும். ஆனால், கிறிஸ்துவ, இஸ்லாமிய ஓட்டு வங்கியை மனதில் வைத்து, ஹிந்து மதத்திற்கு மட்டும் எதிராக தி.மு.க., செயல்படுவது ஒருதலைபட்சமானது. ஸ்டாலினின் ஓட்டு வங்கி அரசியலுக்கு, தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
ஹிந்து தெய்வங்களுக்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருவது கண்டிக்கத்தக்கதாகும். இது தொடர்ந்தால், அவரது வீட்டை தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தொண்டர்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE