துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

Updated : டிச 25, 2020 | Added : டிச 25, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி : துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன். கொரோனா காலத்தில் இப்படி ஓர் அதிர்ஷ்ட வரவு. புதையல் கிடைத்ததை அடுத்து,
Gold, Gold Treasure, Turkey

புதுடில்லி : துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.

இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன். கொரோனா காலத்தில் இப்படி ஓர் அதிர்ஷ்ட வரவு. புதையல் கிடைத்ததை அடுத்து, பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


துருக்கியில், உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்றும், துருக்கி பொருளாதாரத்துக்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. கடந்த, 2018ல் இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 77 ஆயிரம் கோடி டாலராகும்.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உர நிறுவனத்தின் பங்கு விலையும் ஏகத்துக்கு அதிகரித்துள்ளது. அண்மையில், 38 டன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம், ஒரு பெரிய சாதனையை துருக்கி படைத்துள்ளது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி, 100 டன்னாக உயரும் என, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர்பாத்தி டான்மெஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-டிச-202010:59:31 IST Report Abuse
Malick Raja சிலர் அழிந்து போவதற்கு முன் பிறரின் அழிவை எதிர்பார்ப்பது இயல்பு .. அழிவை எண்ணியவர் எவரும் அழியாமல் இருந்ததில்லை .. ஆக காழ்புணர்ச்சிக்கு எல்லை இல்லை . அதிலும் சில வாசகர்களின் கருத்துக்கள் மடைமையின் அடிப்படையில் இருப்பதை அறியாமல் இருப்பதும் தற்குறித்தனத்தின் வெளிப்பாடு
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-டிச-202008:22:02 IST Report Abuse
Cheran Perumalபங்களாதேஷில் ரோஹிங்கியா முஸ்லிம்களை தனி தீவுக்கு அனுப்புவது பற்றி கருத்து ஒன்றும் இல்லையா?...
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
26-டிச-202018:03:58 IST Report Abuse
vnatarajan மூன்றாவது உலக போர் கொரோன என்றால் இந்த தங்க வயல் நான்காவது உலகப்போருக்கு வழி வகுக்கும்
Rate this:
Cancel
Palinci Nagarajan Manikandan - Paramakudi,இந்தியா
26-டிச-202017:16:15 IST Report Abuse
Palinci Nagarajan Manikandan photo is not looking original...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X