பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் ஆதார் மையம் துவக்க கோரிக்கை

Added : டிச 25, 2020
Share
Advertisement
உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் இயங்கும், ஆதார் சேவை மையத்தை, விசாலமான இடத்திற்கு மாற்றி, கூடுதல் சேவை மையம் துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.உத்திரமேரூர் தாலுகா அலுவலக தரைதளத்தில், ஆதார் அட்டை சேவை மையம், குறுகிய இடத்தில் செயல்படுகிறது.இங்கு, புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணி மேற்கொள்ள, தினமும்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் இயங்கும், ஆதார் சேவை மையத்தை, விசாலமான இடத்திற்கு மாற்றி, கூடுதல் சேவை மையம் துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

உத்திரமேரூர் தாலுகா அலுவலக தரைதளத்தில், ஆதார் அட்டை சேவை மையம், குறுகிய இடத்தில் செயல்படுகிறது.இங்கு, புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணி மேற்கொள்ள, தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இருப்பினும், ஒரு நாளைக்கு, 70 பேருக்கு மட்டுமே 'டோக்கன்' வழங்கப்பட்டு, ஆதார் சார்ந்த பணி, செய்து கொடுக்கப்படுகிறது.

இதனால், டோக்கன் வாங்க காலை, 7:00 மணியில் இருந்தே கூட்டம் கூடுகிறது. தாமதமாக வருவோர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.ஆதார் சேவை மையமும் குறுகிய இடத்தில் செயல்படுவதால், சமூக இடைவெளி இல்லாமல் நிற்கவேண்டிய நிலை உள்ளது.எனவே, விசாலமான இடத்திற்கு, ஆதார் சேவை மையத்தை இடமாற்றம் செய்வதோடு, கூடுதல் ஆதார் சேவை மையங்களை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X