மரக்காணம்:''முதல்வர், பிரதமர் என யாராலும், மக்கள் சபை கூட்டத்தை தடுக்க முடியாது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் செல்லியம்மன் கோவில் எதிரே, மக்கள் சபை கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, தி.மு.க., மாவட்டச் செயலர் மஸ்தான், மரக்காணம் காவல் நிலையத்தில், மனு கொடுத்தார். அனுமதி கிடைக்கவில்லை.மக்கள் சபை இதனால், தடையை மீறி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று காலை, 10.30 மணிக்கு, இங்கு மக்கள் சபை கூட்டத்தை நடத்தினார்.
இதில், அவர் பேசியதாவது:கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. அதனால், பெயரை மாற்றி, மக்கள் சபை கூட்டம் நடத்துகிறேன். முதல் நாள் கிராம சபை கூட்டம், 1,166 இடங்களில் நடத்தப்பட்டது. இரண்டாவது முறை, 1,642 இடங்களில் நடத்தப்பட்டது. இதை பார்த்து அச்சமடைந்த தமிழக அரசு, கிராம சபை கூட்டம் நடத்த தடை போட்டுள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., பிரதமர் மோடி என யாராலும், நான் நடத்தும் கூட்டத்தை தடுக்க முடியாது.
இந்த மக்கள் சபை கூட்டத்திற்கு நான் தான் கலெக்டர். அடுத்தது, தி.மு.க., ஆட்சி வரப்போகுது என்பதால், கவர்னர் கூட எனக்கு மரியாதை கொடுக்கிறார்.ஊழல் வழக்குதி.மு.க., மீது போடப்பட்ட ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை. அ.தி.மு.க., மீது போடப்பட்ட ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.
ரூ.200க்கு டோக்கன்!
மரக்காணத்தில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில், ஸ்டாலின் மைக் பிடித்து பேசிக் கொண்டு சென்றார். அப்போது, பெண்கள் கை கொடுக்க முயன்றனர். ஸ்டாலின் விரும்பாததால், அங்கிருந்து வேகமாக நகர்ந்து, அவருக்காக அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார். இந்நிகழ்ச்சி, தனியார் நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதால், பேனர்கள் மற்றும் இருக்கைகள் அவர்கள் முடிவு செய்த இடத்தில் வைக்கப்பட்டன. மேலும், கட்சியினருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு, கூட்ட முடிவில், 200 ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE