வானூர்: வானூர் தாலுகா அலுவலகத்தில் சைல்டுலைன் சார்பில், வட்டார அளவிலான குழந்தைகள் நல ஆலோசனைக்குழுக்கூட்டம் தாசில்தார் சங்கரலிங்கம் தலைமையில் நடந்தது.
சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். இதில், குழந்தை திருமணம் ஒழிப்பு, குழந்தைகள்பிரச்னைகள்தொடர்பாகவும், பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் சைல்டுலைன் 1098 என்ற விளம்பர பதாகை வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.மேலும், ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளை கண்டறிந்து எச்சரிக்கை பலகை வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையஇன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, மண்டல துணை தாசில்தார் ரமேஷ், காந்தி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜானகிராமன், தீயணைப்பு நிலைய அலுவலர் பச்சையப்பன், விழுப்புரம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அலெக்ஸ், ஆசிரியர் காத்தவராயன், சமூக ஊர் நலஅலுவலர் ஜீவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE