சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 வயது சிறுமியை தாக்கி குப்பைக்குள் வீசிய பெண்

Added : டிச 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:அவிநாசி அருகே, 7 வயது சிறுமியை தாக்கி, குப்பையில் வீசிச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, தண்டுக்காரன்பாளையத்தில், நேற்று மதியம், 2:00 மணியளவில், சாலையோரம் குவிந்து கிடந்த குப்பைக்கு மத்தியில், 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை, 30 வயது பெண் கடுமையாக தாக்கி கொண்டிருந்தார். விவசாய தொழிலாளர்கள் சத்தம் போட்டவாறு, அந்த

திருப்பூர்:அவிநாசி அருகே, 7 வயது சிறுமியை தாக்கி, குப்பையில் வீசிச் சென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே, தண்டுக்காரன்பாளையத்தில், நேற்று மதியம், 2:00 மணியளவில், சாலையோரம் குவிந்து கிடந்த குப்பைக்கு மத்தியில், 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை, 30 வயது பெண் கடுமையாக தாக்கி கொண்டிருந்தார். விவசாய தொழிலாளர்கள் சத்தம் போட்டவாறு, அந்த இடத்துக்கு ஓடினர். அதிர்ச்சி அடைந்த அப்பெண், தன்னிடமிருந்து மூன்று பைகளை வீசிவிட்டு, சிறுமியை கீழே தள்ளி, அருகே நின்ற ஒரு காரில் ஏறி தப்பினார்.

சிறுமி நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மாலை, கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.சிறுமி தாக்கப்படுவதற்கு முன், எலி மருந்து போன்ற விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்டதில், உடல்நிலை மோசம் அடைந்துள்ளது.

போலீசார் கூறியதாவது:சிறுமியை வீசி சென்ற இடத்தில் கிடந்த பைகளில் சாக்லேட், பொம்மை மற்றும் ஆடைகள் இருந்தன. அதில், பெங்களூரில் ஒரு கடையில், நேற்று முன்தினம் பொருட்கள் வாங்கியதற்கான பில்கள் இருந்தன.அதிலுள்ள முகவரியை வைத்து, பெங்களூரில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரை, தொடர்பு கொண்டு விசாரித்ததில், அப்பெண் இரு சிறுமியருடன் வந்து பொருட்கள் வாங்கி உள்ளார்.

போலீஸ் தனிப்படை குழு, பெங்களூரு விரைந்துள்ளது.அந்த பெண் யார், சிறுமியருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, மற்றொரு சிறுமியின் நிலை என்ன, காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து, விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X