செஞ்சி: கெங்கவரம் வனப்பகுதியில் உள்ள துருகம் ஏரி உடைந்து வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெற் பயிர்கள் சேதமானது.செஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட கெங்கவரம் காப்பு காட்டு பகுதியில் துருகம் மலையடிவாரத்தில் வனத்துறை பகுதியில் ஏரிஉள்ளது. வன விலங்குகளுக்கு தண்ணீர் தேவைக்கு இந்த ஏரி பயன் பட்டு வந்தது. இதில் இருந்து பாசனம் ஏதும் இல்லை.இந்த ஏரி சில தினங்களுக்கு முன் நிறைந்து உபரி நீர் வெளியேறியது.வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இதில் மராமத்து பணிகள் நடக்காமல் இருந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு திடீரென ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு வயல்களில் புகுந்தது. இதில் காட்டை ஒட்டி இருந்த 50 ஏக்கர் அளவிளான நெற் பயிர்கள் சேதமானது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அடுத்துள்ள கெங்கவரம் ஏரி வழியாக நந்தன் கால்வாயில் கலந்து பனமலை ஏரிக்கு சென்றது.ஏரி உடைந்த தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று மாலை ஏரி பகுதியை பார்வையிட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில்தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளனர்.வெள்ளம் வரும்உடைப்பு ஏற்பட்டுள்ள ஏரிக்கு மழை பொழிந்தால் காட்டு வெள்ளம் வரும். தற்போது ஏரியில் கரை இல்லை என்பதால் உடைப்புவழியாக மொத்த வெள்ளமும் மீண்டும் பயிர்களை நாசம் செய்யும். எனவே விரைவாக ஏரியின் கரையை புதுப்பிக்க மாவட்டநிர்வாகம் வனத்துறையினரை வலியுறுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE