சென்னை : எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், 'மார்கழி சீசன் எம்.ஜி.எம்.,' என்ற, இரண்டு நாள் இசை நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில், எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை உள்ளது. அங்குள்ள அரங்கில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 'மார்கழி சீசன் எம்.ஜி.எம்' என்ற பெயரிலான, இரு நாட்கள் நடக்கும் இசை நிகழ்ச்சி, நேற்று மாலை துவங்கியது.முதல் நாள் நிகழ்ச்சியில், 'பியானோ' கலைஞர் அனில் சீனிவாசன், பாடகர் சிக்கில் குருச்சரன், மிருதங்கம் கலைஞர் சுமேஷ் நாராயண் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
பாடகர்கள் ரஞ்சனி, காயத்ரி ஆகியோரின் இசை நிகழ்ச்சி, இன்று நடக்க உள்ளது. அந்நிகழ்ச்சிகளை, 'பேஸ்புக், யூ டியூப்' ஆகிய தளங்களில், மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நேரடியாக காணலாம்.இதுகுறித்து, எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபால் கூறியதாவது:
மார்கழி மாதத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள முக்கிய சபாக்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளுக்கு, ஆண்டுதோறும், நிதியுதவி செய்து வருகிறோம். நடப்பாண்டு, ஊரடங்கால், மார்கழி இசை நிகழ்ச்சி நடக்கவில்லை.எனவே, எங்கள் வளாகத்தை சபாவாக மாற்றி, இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசு கட்டுப்பாடுகளால், அதிகம் பேர் பங்கேற்க அனுமதிக்க முடியவில்லை. நிகழ்ச்சியை, மக்கள் நேரடியாக பார்க்கும் வகையில், 'பேஸ்புக், யூ டியூப்பில்' ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE