திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை, நேற்று, உற்சாகமாக கொண்டாடப்பட்டது.கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பெருவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. டிசம்பர் மாத துவக்கத்திலேயே, தேவாலயங்களின் சார்பில், இரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று பூபாளம் பாடி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக் கொள்வது வழக்கம்.இந்த முறை, கொரோனா ஊரடங்கால் தேவாலயங்களில் பூபாளம் பாடுவது தவிர்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நள்ளிரவு திருப்பலி அனைத்து தேவாலயங்களிலும் நடந்தது. தேவாலயம் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகளில், ஏசுவின் பிறப்பை குறிப்பிடும் வகையில், குடில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.l திருப்பூர் குமரன் ரோட்டிலுள்ள புனித கத்ரீனாள் அன்னை தேவாலயம், அவிநாசி ரோடு சி.எஸ்.ஐ., மற்றும் செயின்ட் ஜோசப் உட்பட திருப்பூர் பகுதியில் உள்ள தேவாலயங்களில், நேற்று முன்தினம், ஏசு பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது.l அவிநாசி புனித தோமையார் தேவாலயத்தில், பங்கு குரு கென்னடி தலைமையில், திருவிழா திருப்பலி நடத்தப்பட்டது.l சேவூர், புனித லுார்து அன்னை தேவாலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE