சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது

Added : டிச 25, 2020
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர், சம்பத்குமார், 32. சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர். அவரது மனைவி, பாக்கியலட்சுமி, 25. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், நுழைந்த மர்மநபர், சி.சி.டிவி., கேமராவை திருப்பி வைத்து, மின் இணைப்பைதுண்டித்துள்ளார்.சத்தம் கேட்டு பாக்கியலட்சுமி வெளியே வந்ததும், மர்மநபர் தப்பினார்.தகவலறிந்த

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர், சம்பத்குமார், 32. சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர். அவரது மனைவி, பாக்கியலட்சுமி, 25. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், நுழைந்த மர்மநபர், சி.சி.டிவி., கேமராவை திருப்பி வைத்து, மின் இணைப்பைதுண்டித்துள்ளார்.சத்தம் கேட்டு பாக்கியலட்சுமி வெளியே வந்ததும், மர்மநபர் தப்பினார்.தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், சம்பவம் நடந்த வீட்டை சுற்றி சோதனை செய்தனர்.அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கியிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். குமுடிமூலை, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, அறிவழகன் மகன் அன்பு முருகன், 24, என்பதும், வீட்டில் திருட முயன்றதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அன்புமுருகனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X