பொது செய்தி

தமிழ்நாடு

தங்க அங்கி சுமந்த ராமையா

Added : டிச 25, 2020
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ராமையா ஐயப்பனின் தங்க அங்கியை சுமக்கும் அதிர்ஷ்டகாரர்களில் ஒருவரானார்.பட்டிவீரன்பட்டியில் வசிக்கும் ராமையா ஐயப்ப சேவா சங்கத்தில் இணைந்து சபரிமலை சீசன் நாட்களில் கோயிலுக்கும், பக்தர்களுக்கும் சேவை புரிந்து வருகின்றார். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆரன்முளா கோவிலில் இருந்து கொண்டு

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ராமையா ஐயப்பனின் தங்க அங்கியை சுமக்கும் அதிர்ஷ்டகாரர்களில் ஒருவரானார்.

பட்டிவீரன்பட்டியில் வசிக்கும் ராமையா ஐயப்ப சேவா சங்கத்தில் இணைந்து சபரிமலை சீசன் நாட்களில் கோயிலுக்கும், பக்தர்களுக்கும் சேவை புரிந்து வருகின்றார். சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆரன்முளா கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் ஐயப்பனின் தங்க அங்கியை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரை சுமந்து செல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ராமையா, துாத்துக்குடியைச் சேர்ந்த கனகராஜ், சென்னையைச் சேர்ந்த திருப்பதிகண்ணன் ஆகியோருக்கு ஐயப்பனின் தங்க அங்கி சுமந்து செல்லும் பாக்கியம் கிடைத்தது.ராமையா கூறுகையில்,"ஐயப்ப சேவா சங்கத்தில் இணைந்து பக்தர்களுக்கும், கோயிலுக்கும் சேவை செய்து வந்ததால் ஐயப்பனின் தங்க அங்கி சுமக்கும் பாக்கியம் கிடைக்கும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X