பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.20க்கு குடிநீர் பாட்டில் பயணிகள் குற்றச்சாட்டு

Added : டிச 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:பஸ் ஸ்டாண்டில் ஒரு குடிநீர் பாட்டில், 20 ரூபாய்க்கு விற்பதால் பயணிகள் வாங்கி பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், நாகர்கோவில், திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வரும் பஸ்கள் இங்கு நிறுத்தப்படுகிறது.வழக்கமாக, 15 ரூபாய்க்கு

திருப்பூர்:பஸ் ஸ்டாண்டில் ஒரு குடிநீர் பாட்டில், 20 ரூபாய்க்கு விற்பதால் பயணிகள் வாங்கி பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், நாகர்கோவில், திருநெல்வேலி உட்பட தென்மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வரும் பஸ்கள் இங்கு நிறுத்தப்படுகிறது.வழக்கமாக, 15 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில், 20 ரூபாய்க்கும், இரவில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.வெளியே குறைந்தபட்சம், 30 முதல், 40 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி, தயிர், லெமன் சாதம், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வேறு கடைகளோ, குடிநீர், உணவுக்கான வசதிகளோ இல்லாத நிலையை, பயன்படுத்தி, கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.இது குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:கோவில்வழி பஸ் ஸ்டாண்டில், தண்ணீர், உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர். ஊருக்கு செல்லும் அவசரத்தில், வாங்க வேண்டி உள்ளது. எனவே, இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X