கடலுார்: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என, த.மா.கா., கோரிக்கை வைத்துள்ளது.த.மா.கா., கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடலுார் நேரு பவனில் நடந்தது. மாவட்ட தலைவர் ஞானசந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மேற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்., வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாவட்ட துணைத் தலைவர்கள் சேகர், ராஜேந்திரன், ராஜலிங்கம், அலமு தங்கவேலு, சாம்பசிவம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், த.மா.கா., தலைவர் வாசனை, ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்த அ.தி.மு.க., தமிழக முதல்வர், துணை முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவிப்பது. த.மா.கா., விவசாய அணி தலைவர் நாகராஜன் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது. கடலுார் மாவட்டத்தில் கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். சேதமான சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைப்பது. 2021 சட்டசபை தேர்தலில் வாசன் அமைக்கும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றுவது, வாசன் பிறந்தை நாளை நலத்திட்ட உதவிகள் வழகி கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE