திருப்பூர்:படியூர் போலீஸ் செக்போஸ்ட்டுக்குள் கட்டுப்பாட்டை இழந்த கார் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர் தப்பினர்.காங்கயம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட படியூர் பகுதியில், ஒரு செக்போஸ்ட் உள்ளது. நேற்று காலை 10:00 மணியளவில், திருப்பூர் நோக்கி சென்ற ஒரு கார் அதிவேகமாக வந்து செக்போஸ்ட்டுக்குள் நுழைந்து மோதி நின்றது.நல்ல வேளையாக, போலீசார் ரோட்டில் நின்று வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து ஏற்படுத்திய கார், திருப்பூரை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கிருபாகரன், 32 என்பவருக்குச் சொந்தமானது.காரை டிரைவர் பிரவீன், 24 ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்தில் காரில் வந்த அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்படவில்லை. காங்கயம் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE