ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் மகன் கமலேஷ் 9, மகள் குஷிகா 7, ஆகியோருடன் தந்தை கணபதி பலியானார்.
ராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி கணபதி 36. மனைவி காயத்ரி. இந்த தம்பதிக்கு மகன் கமலேஷ், மகள் குஷிகா, இருந்தனர். கணபதி நேற்று மகன், மகளுடன் டூவீலரில் ராஜபாளையம் தனியார் மருத்துவமனை சென்றுவிட்டு சங்கரன் கோவில் ரோட்டில் சென்றார். எம்.ஆர்.நகர் அருகே டிராக்டரை கடக்க முயன்றபோது எதிரே வந்த அரசு பஸ் டூவீலரில் மோதியது. பஸ்சின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில் கணபதி, குஷிகா இறந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட கமலேஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நேற்று இரவு இறந்தார். தெற்கு போலீசார் விசாரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE