பேரூர்;பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்ட, அரசாணிக்காய் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட, தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஓணம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசாணி சாகுபடி செய்யப்படும்.குறிப்பாக, பொங்கல் சமயத்தில் அரசாணிக்கு நல்ல விலை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, காளிமங்கலம், முகாசிமங்கலம், மூங்கில் மடை குட்டை, கரடிமடை, மத்திபாளையம், மோளப்பாளையம் உள்ளிட்ட மானாவாரி நிலங்களில், அரசாணி சாகுபடி செய்யப்பட்டது.பருவமழைகள் கை கொடுத்ததால், ஐந்து முதல், பத்து கிலோ எடை வரை அரசாணி விளைச்சல் கண்டுள்ளது. தற்போது கிலோ, ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது. பொங்கல் சமயத்தில் கிராக்கி அதிகரித்து, நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், ''சித்திரை மற்றும் ஆவனி பட்டங்களில், அரசாணி சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, 15 ஆயிரம் மட்டுமே செலவு. கிலோ, பத்து ரூபாய்க்கு விற்றால் போதும். வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்தால், நல்ல லாபம் கிடைக்கும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE