கோவை;கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கொரோனா நோயிலிருந்து மீண்டவர்களுக்கு தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், புற நோயாளிகள் பிரிவை, கலெக்டர் ராஜாமணி நேற்று திறந்து வைத்தார்.அவர் கூறியதாவது:கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கோவைமட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இங்கு, 650 படுக்கை வசதிகளுடன் கூடிய, கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை, 9.500க்கும் மேற்பட்டவர்கள், உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று நலமுடன் சென்றுள்ளனர்.குணமடைந்து சென்றவர்களில் ஒரு சிலருக்கு, மூச்சு திணறல், உடல் வலி, உடல் சோர்வு, வயிற்று கோளாறுகள், படபடப்பு, துாக்கமின்மை, தொடர் இருமல், உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. இவர்களுக்கு சிகிச்சை அளித்திட, பிரத்யேக தனி வெளிநோயாளிகள் பிரிவு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.காலை, 8:00 முதல் 12:00 மணி வரை செயல்படும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி, பர்ஸ் லிப் சுவாசப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சுவாச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.இ.எஸ்.ஐ., மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE