பொது செய்தி

தமிழ்நாடு

இங்கிலாந்தில் இருந்து வந்த 59 பேருக்கு தொற்று இல்லை!

Added : டிச 26, 2020
Share
Advertisement
கோவை:இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த, 59 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, முன்னெச்சரிக்கையாக கோவை விமான நிலையத்தில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து கடந்த மாதம் முதல், விமானம் மூலம் 133 பயணிகள் கோவை வந்துள்ளனர்.இவர்களில்,

கோவை:இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த, 59 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, முன்னெச்சரிக்கையாக கோவை விமான நிலையத்தில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து கடந்த மாதம் முதல், விமானம் மூலம் 133 பயணிகள் கோவை வந்துள்ளனர்.இவர்களில், கோவையை சேர்ந்தவர்கள் 99 பேர், திருப்பூரை சேர்ந்தவர்கள் 11 பேர், துாத்துக்குடியை சேர்ந்தவர் ஒருவர். மேலும், 25 பயணிகளின் விபரங்கள் டபுள் என்ட்ரி, மற்றும் ஒருவர் பயணத்தை ரத்து செய்துள்ளார்.இந்நிலையில், கோவைக்கு வந்த 99 பயணிகளில், 97 பேரை சுகாதார துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இதில், இருவர் மீண்டும் இங்கிலாந்து சென்று விட்டனர்.மீதமுள்ள, 96 பேருக்கு அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், 59 பேருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 37 பேரின் முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X