'ஆன்லைன்' மோசடி நிறுவனம் சீன நபர் உட்பட 4 பேர் கைது

Added : டிச 26, 2020
Share
Advertisement
ஐதராபாத் :தெலுங்கானாவில் 'ஆன்லைன்' நிறுவனம் நடத்தி மோசடி செய்த சீனாவைச் சேர்ந்தவர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.ஐதராபாதில் சீனாவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டன.இவற்றின் 'மொபைல் ஆப்'களை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்தால் 'மொபைல் போனில்' இருக்கும் தகவல்கள் நிறுவனத்தில் பதிவாகும்.இந்நிறுவனத்தினர் 25 முதல் 30 சதவீதம் வட்டி

ஐதராபாத் :தெலுங்கானாவில் 'ஆன்லைன்' நிறுவனம் நடத்தி மோசடி செய்த சீனாவைச் சேர்ந்தவர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாதில் சீனாவைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டன.இவற்றின் 'மொபைல் ஆப்'களை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்தால் 'மொபைல் போனில்' இருக்கும் தகவல்கள் நிறுவனத்தில் பதிவாகும்.இந்நிறுவனத்தினர் 25 முதல் 30 சதவீதம் வட்டி ஜி.எஸ்.டி. செயலாக்க கட்டணம் உட்பட விதிகளை மீறி கூடுதல் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நிறுவனங்களை நடத்திய டில்லியில் வசித்த சீனாவைச் சேர்ந்த யி பாய் என்ற டென்னிஸ் ராஜஸ்தானை சேர்ந்த சத்தியபால் கியாலியா உட்பட நால்வரை நேற்று கைது செய்தனர். இந்நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் இருந்த இரண்டு கோடி ரூபாய் முடக்கப்பட்டது. வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சீனாவை சேர்ந்த ஜிக்ஸியா ஜாங் உட்பட இருவர் தலைமறைவாயினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X