கோவை:கொரோனா ஊரடங்கு காலத்தில், பல குழந்தைகளின் உடல் எடை, வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள், மேலும் குண்டாகியுள்ளன. குறிப்பாக, அபார்ட்மென்டுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கே, இந்த பாதிப்பு அதிகம் என்கின்றனர் டாக்டர்கள்.டி.வி., வீடியோ கேம் என, இருந்த குழந்தைகள் இப்போது, மொபைல் போனில் ஆன்லைன் வகுப்பு படிக்கின்றனர்.
இதனால், ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள், மேலும் குண்டாகி உள்ளனர்.இதனால் அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும், சாக்லெட், பேக்கரி ஐட்டங்கள் மற்றும் நொறுக்கு தீனிகளால், உடல் எடை அதிகரித்து வருகிறது. இது ஆபத்தானது என்கிறார், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரியின் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் உமாசங்கர்.அவர் கூறியதாவது:பொதுவாகவே, பெற்றோர் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் பள்ளியில் கேம்ஸ் பீரியடில் மட்டும்தான் விளையாடுகின்றனர்.
இது மட்டுமல்ல, குழந்தைகள் சாப்பிடும் நவீன உணவும், மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதனால் 'டைப் ஒன் டயாபடீஸ்' நோயால் பாதிக்கப்படும், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது குறித்த ஆய்வுகள், இப்போது நிறைய வெளிவந்துள்ளன. கடந்த, 10 மாதங்களில் வழக்கத்தை விட, குண்டு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.'அபார்ட்மென்ட் சிண்ட்ரோம்'குழந்தைகளின் உடல் பருமனுக்கு, இருப்பிட சூழ்நிலையும் ஒரு காரணம். இதை, 'அபார்ட்மென்ட் சிண்ட்ரோம்' என்று சொல்கிறோம். குழந்தைகள் வெயிலில் விளையாடவில்லை என்றால், விட்டமின் டி கிடைக்காது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியம்.நோய் எதிர்ப்புக்கும், விட்டமின் டி அவசியம்.
இது இல்லாததால்தான் சாதாரண காய்ச்சல், சளியை கூட குழந்தைகளால் தாங்க முடியவில்லை. மருந்து மாத்திரையை நாட வேண்டி உள்ளது.என்ன செய்ய வேண்டும்பெற்றோர்கள், குழந்தைகள் விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். யோகா, சைக்கிள் ஓட்டுதல், வெயிலில் விளையாடுதல் அவசியம். கொரோனா பயமாக இருந்தால், மொட்டை மாடியை பயன்படுத்தலாம். ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும், கலாசாரத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அமெரிக்காவின் குழந்தைகள் நல அகாடமி, 'ஸ்கிரீன் வியூ டைம்' என்று சொல்லப்படும், டி.வி., கம்ப்யூட்டர், மொபைல் போன் பார்க்கும் நேரம், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருக்க கூடாது என்கிறது. கார்ட்டூன் பார்ப்பது பெரிய தீமை என்பதை, குழந்தைகளுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும். மொபைல் போன் கையாள்வதை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.'டைப் ஒன் டயாபடீஸ்' எனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்த ஆய்வுகள், இப்போது நிறைய வெளிவந்துள்ளன.
கடந்த, 10 மாதங்களில், குண்டு குழந்தைகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.--உமாசங்கர், இணை பேராசிரியர்குழந்தைகள் நலத்துறை, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரி. பெற்றோர்கள், குழந்தைகள் விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். யோகா, சைக்கிள் ஓட்டுதல், வெயிலில் விளையாடுதல் அவசியம். கொரோனா பயமாக இருந்தால், மொட்டை மாடியை பயன்படுத்தலாம்.
வீட்டில் உணவு மட்டுமே கொடுக்க வேண்டும். ஆன்லைன் உணவு கலாசாரத்தை தவிர்க்க வேண்டும்.குழந்தைகள் வெயிலில் விளையாடவில்லை என்றால், விட்டமின் டி கிடைக்காது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியம். நோய் எதிர்ப்புக்கும், விட்டமின் டி அவசியம். இது இல்லாததால்தான் சாதாரண காய்ச்சல், சளியை கூட குழந்தைகளால் தாங்க முடியவில்லை. மருந்து மாத்திரையை நாட வேண்டி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE