திருப்பூர்:தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) 64வது மகாசபை கூட்டம், வரும் 30ம் தேதி, திருப்பூர் ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அரங்கில் நடைபெற உள்ளது.காலை, 10:30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு கணக்கு குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், சங்க உறுப்பினர்கள், மகாசபை கூடுவதற்கு முன், எழுத்துப்பூர்வமாக சங்கத்துக்கு தெரிவிக்கலாம்.சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்படுகிறது; அனைவரும் முக கவசம் அணிந்து, பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE