பல்லடம்:சாப்பாட்டில் பூச்சி புழு கிடந்தது குறித்து, பல்லடம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், இரண்டு நாட்களுக்கு முன் இரவில் வழங்கப்பட்ட உணவில், புழு மற்றும் பூச்சிகள் நெளிந்ததாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தொழிலாளர்கள் கூறியிருப்பதாவது:பல்லடம் அரசு போக்குவரத்து கழக கேன்டீனில் சுகாதாரம் பின்பற்றப்படுவதில்லை. இரண்டு நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட உணவில் புழு பூச்சிகள் இருந்தன. இதைப்பார்த்து, சாப்பிட்டு கொண்டிருந்த பலரும் பாதியில் எழுந்து சென்றோம்.இது போன்ற உணவை உண்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கேன்டீனை பராமரித்து ஆரோக்கியமான உணவு வழங்குவதுடன், வழக்கம்போல் மதியம் முழு சாப்பாடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தொழிலாளர்களின் புகார் குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்சதீஷ்குமாரிடம் கேட்டதற்கு, அவர் கூறிய தாவது:கேன்டீனில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும். சுகாதாரம் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படுவதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE